விடுப்பு..!!

விடுப்பு

விடுமுறை பயணம்
நன்றாய் அமைய
வேலைப் பழுவும்
கொஞ்சம் அதிகரிக்க
ஆலயங்கள்திருவிழா
அயலில் கொண்டாட
அலுப்பு இன்றியே
நானும் நகர்ந்திட

உடலும் கொஞ்சம்
உற்சாக பெற்றிட
தண்ணீர் பானங்கள்
அதிகம் பருகியே
உடல் எடையை
கொஞ்சம் குறைத்திட
துவிச்சக்கர வண்டி
ஓட்டமாய் நானும்

காலை வெயிலும்
கண்பயிற்சி செய்தும்
மாலை வீட்டிலே
யோகா செய்தும்
என்னை நானே
திருத்தி அமைத்தே
இயல்பாய் இருக்கவே
இணைத்த கவியே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading