கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி

பாமுகம்

பாரினில் ஓர் முகம்
பாமுக பந்தலின் நந்தவனம்
நாற்றிசையில் இனையும்
பலர்முகம்

பாலர் முதல் பாட்டி வரை
பங்கேற்கும் வளர்முகம்
திங்கள் முதல் ஞாயிறு வரை
திறமை காட்டும் ஏறுமுகம்.

நிதம் நிதம் புது புது மலர்கள்
மலரும் நந்தவனம்
மழலைகள் புதுமுகம்
கை வண்ணம் தீட்டும்.
அழகு முகம்.

நற்றமிழ் புகுத்திடும்
வளத்திடும் வளர்நிலம்
பூத்துக் குலுங்கும்
வாசமுள்ள வண்ணமுகம்.

ஆண்டுகள் 25 தொடரும்
வெள்ளிமுகம்
வெள்ளிவிழா கண்ட
பாமுகம்

தலைவனும் தலைவியும்
இனனந்தே விதை இட்டு
வளர்த்திடும் விளைநிலம்
செழித்து வளரும் பயிருக்கு
உரமாய் ஈரமாய் கனிவாய்
உரைத்திடும் பாமுகமே
பல்லாண்டு பல்லாண்டு
பாரினில் தொடர வாழ
வாழ்த்துக்கள்
கோடி

அதிபர் ருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading