மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

நூல்கள்

வண்ண நூல்கள் கற்றிட்டே
வாழ்வில் என்று உயர்வோமே
எண்ணம் யாவும் எழிலறிவு
ஏற்றம் பெற்றே மிளிர்வோமே
கண்ணில் காணும் நன்நால்கள்
கவிதைக் கலையை வளர்த்திடுமே
திண்ண மாக உலகினிலே
திடமாய் வென்று புகழாவோம்

நூல்கள் என்னும் ஆயுதமே
நுணுகிக் கற்கும் வேலாகும்
தாள்கள் கொடுக்கும் வண்ணச்சுகம்
தளிர்க்கும் செம்மை மொழியறிவு
வேல்கள் போலே கூர்மையாலே
வென்று வாழ்வில் நிலைத்திடவே
கால்கள் போலே நடைபயின்று
கணணித் தமிழாய்ப் படித்திடுக!

நகுலா சிவநாதன்1716

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading