நகுலா சிவநாதன்

எதிர்ப்பு அலை

பசப்பு வார்த்தை கூறி
பாழாய்போன அரசால்
பட்டினி சாவை எதிர்நோக்கும்
மக்கள்அலை எதிர்பு அலை

நீதிக்காக போராடும் நித்தியலை
பாதி உரிமை பெற துடிக்கும் மக்கள்
காலி முகத்திடலில் பட்டினியுடன் போராடும்
வீதிப் போராட்ட அட்டகாச எதிர்ப்பலை

ஊர்தி நிறுத்தி உரிமைக்குரலை
நசுக்கிட முனையும் நாசகாரதிட்டம்
இனியும் அணையுமா?? அடங்குமா?!
எதிர்ப்பின் கிளற்சி ஏற்றம் காணுமா??
நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading