கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நகுலா சிவநாதன்

அனலாய் வெப்பம்

அவியும் புழுக்கம் அனலாய் இன்றே
அவனி காணும் அதிவெப்பம்
ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும்
அனலாய் வெப்ப அதிகரிப்பு
புனலே இல்லா புழுக்கம் இன்று (புனல் -மழை)
40 பாகையை தாண்டி ஓட்டம்
நாடுகளிடையே எரியும் நிலையும்
காடுகள் எல்லாம் அக்கினி மயம்
காட்டு விலங்குகள் ஓடும் அவலம்

சீற்றம் கொள்ளும் புவியின் நிலையே
சிந்தை கொள்வீர் மானுடரே!
மாற்றம் புவியில் வந்து நின்று
மண்ணில் நிலைமை மாறுதுபார்
ஏற்ற மாகும் வெப்ப அளவே
எரியும் நிலைக்கு வந்திடுமே
சுற்றம் யாவும் காப்போம் நாளை
சுகமாய் வாழ முயல்வோமே!

நகுலா சிவநாதன் 1682

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading