சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நட்பு

சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத நட்பினால்
உசிரையும் கொடுக்கும் அன்பே சிறப்பு

துரியோதனனுக்கு கர்ணன் எடுத்துக்காட்டே பாராய்
தக்கசமயம் அங்கே தயங்காமல் நின்றானே
அடுத்துக் கெடுக்கும் வன்மம் அழித்தே
எடுத்துச் சொல்லும் செயலை உருவாக்கு

வடுக்களை விதைக்காது வாரியே குற்றாது
துடுப்பாய் என்றும் தோன்றலே சான்று
உதவிடும் எண்ணத்தில் உண்மையும் சீரோடெழுந்தால்
அளவிட முடியாத ஆணிவேரே நட்பாகும்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading