தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

“நீளட்டும் வீச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (454)

வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி எம்
வாசல் தொடும் பா முகம்

வரை முறை கடந்து
புது யுகம் படைத்திட
ஆறுக்கும் கீழாகி அறுபதுக்கும்
மேலான அகவையுடையோரும்
கற்கும் கலைக் கூடம்

தன்னலமில்லா மனமும்
அன்பே குணமுமாய்
இன் சொல்லே எந்நாளும்
உன்னில் இருந்து கிளம்பும்
பாங்கில் தளும்புதே சிநேகம்

நேற்றும் இன்றும் நாளையுமாய்
எம்மோடிணையும் வானொலியே,
பாமுகமே ,என்னவென்று
நன்றி சொல்ல?
நேசிக்கின்றேன் நீ வாழ்கவென
ஆசிக்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading