நூலக எரிப்பு

ரஜனி அன்ரன்

“ நூலக எரிப்பு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 30.05.2024

அழியாத வடுவாக ஆறாத ரணமாக
நூலக எரிப்பு எம்மனக் கொதிப்பு
ஞானத்தை அள்ளிக் கொடுத்த ஞானபீடம்
தமிழின் சிறப்பினை இனத்தின் பெருமையை
தனித்துவமாக்கிய ஆதார சுருதி
தீயிட்டுக் கொழுத்தப்பட்டதே விஷமிகளால் !

புகை படர்ந்த வானம்
கரிக்கறை படிந்த சுவர்கள் சாட்சியாக
சாம்பலில் புதைந்த அறிவுப்புதையல்கள்
படைப்பாளர்களின் கனவுகள்
கவிஞர்களின் கற்பனைகள்
புத்தகங்கள் குவிந்த பொக்கிஷ வீடு
தத்துவ வாதிகளின் சிந்தனைத் தேட்டங்கள்
மொத்தமாய் சாம்பல் மேடானதே !

அணைந்தது அறிவின் ஜோதி
மூடப்பட்டது கல்வியின் கதவுகள்
முடக்கப்பட்டது அறிவின் தேடல்கள்
தடைப்பட்டது முன்னேற்றம்
அதுவே நூலக எரிப்பின் அழியாத வடு
ஆனாலும் எரிந்த சாம்பல் மேட்டிலிருந்து
அறிவின் தேவதை இன்று பூத்து நிற்குது
அறிவுத் தேவையை வாரி வழங்குது
மனித குலத்திற்கு இது நல்லதொரு பாடம்
அதுவே நூலக எரிப்பின் அழியாப் பாடம் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading