தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(97) 06/04/23
அநீதித் தீர்ப்பு

குவலயத்தின் பெரும் பரப்பில்
கண்டனங்கள் ஏராளம்
சுரந்து வரும் கொடுமைகளும்
கோபங்களும் தாராளம்

பெண்கள் குழந்தைகள்
நோயாளர் முதியோரும்
நிம்மதி இழந்தோராய்
முடங்கியே கிடக்கின்றனர்.

மானிட நேயத்தை
இதயத்தில் சுமந்தபடி
காருண்ய பண்புகளை
பார்மீது படர விட

நேர்மையும் நியாயமும்
வேரூன்றிப் படர்ந்திடவே
நாவினிக்கும் வார்த்தைகளால்
போதனைகள் பகர்ந்தாரே

நியாயங்கள் நேர்மைகள்
வறண்ட கொடுங்கோலர்
வக்கிர வன்முறைகளை மூலதனமாக்கி
அநீதித் தீர்ப்பெழுதி நல்லாயனை
சிலுவையிலே அறைந்து கொன்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading