நேவிஸ் பிலிப்

கவி இல(99) 19/04/23
தாயினும்சிறந்த::::
நலம் தரும் மழையாய் -அன்பை
நானிலம் எங்கும் பொழிந்து
இரவும் பகலும் விலகாது
இதயத்தில் இரக்கத்தை சுரந்து

இமைப் பொழுதேனும் மறவாத
அன்புக்கு இலக்கணமானாய்
இதயங்கள் ஏங்கும் வேளையிலே
இரங்கிடும் அன்பாய் திகழ்கின்றாய்

குன்றுகள் தகர்ந்து போனாலும்
கொள்கைகள் மறைத்து போவதில்லை
குறையற்ற அன்புடனே
நாளும் எம்மைக் காக்கின்றாய்

இறப்பினும் உயிர்ப்பாய் இருக்கின்றாய்
இரவிலும் பகலாய் ஒளிர்கின்றாய்
தாயினும் சிறந்த தயைக் கடலே
உந்தன் தாள் மலர் பணிந்தே போற்றுகின்றோம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading