கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை இல(56)
அரங்கேற்றம்

கல்வாரிக் குன்றினிலோர் கோரக் காட்சி
கண்டோர் பதை பதைத்துச் சொல்லும் சாட்சி
அந்தரத்தில் தொங்குகின்றார் பரமனங்கே
மூன்றாணிப் பிணையலோடு சிலுஙையிலே

செந்நீரில் குளித்தவராய் கரங்கள் நீட்டி
சிறகுதனை விரித்ததொரு பறவை போலும்
வந்த பணி முடிந்ததென்ற நிறைவோடு
மென்னகையாய் விழியசைத்துத் தலை சாய்க்க

கரு மேகம் திரண்டங்ஙே சூழ்ந்திருக்க
கதிரவனும் ஒழியிழந்து மறைந்தே போக
கல்குன்று மலர்களும் மணம் துறக்க
கல்வாரித் தென்றலே நீ சோர்ந்ததேனோ

மின்னலடி ஒசையுடன்
கற் தளங்கள் அதிர்ந்தொலிக்க
பகலே இரவாய் மாறிப் போக
இயற்கையுமே இயக்கமின்றிப் போனதுவே

மன்னுயிர்க்காய் தன்னுயிரீந்த மாபரனார்
மகனை ஈன்ற தாய்மரியும் எம் தாயானார்
சத்திய வேதம் என்றுமே நிலத்திடுமே
நித்தியமாய் பதித்திடுவோம் மனத்திடையே

Nada Mohan
Author: Nada Mohan