அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ஆக்கம் 330
பண்டிகை வந்தாலே

ஆயிரமாயிரம் கனவுகளுடன்
இனிமையாகப் பவனி வரும்
பாரம்பரியப்
பண்டிகை தீபாவளித் திருநாள்
திருநாள்

இப் பெரு நாள் பண்டிகை வந்தாலே
வீடெங்கும் ஆரவாரம்
நாடெங்கும் கொண்டாட்டம்
ஊரெங்கும் கோலாகலம்
கடைத் தெருவில்
சனக்கூட்டம்

புத்தம் புது உடுப்புகள்
வாங்கி உடுத்து
ஆண்டவனைத் தரிசித்து
விதம் விதமாய்ப்
பலகாரஞ் சுட்டு
பட்டாசு கொழுத்தி
வெடி வெடித்திட

பட்ட துன்பம் மறைய
முடக்கப்பட்ட வாழ்வில்
முடங்கிய மனிதன் நிமிர மனம் நிறைய
மகழ்வூட்டிட இறை
அருள் தந்திடவே
:அட்டகாசமான தீபாவளிப்
பண்டிகை வந்தாலே
துன்பம் நீங்கி இன்பம் பொங்கிடுமே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading