பாமுகமே வாழி

சிவாஜினி சிறிதரன்

லண்டன் தமிழ் வானொலியே காற்றாகி வந்தாய்
கடலாகி வந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய் !

மழலையையும் இளையவரையும்
பெற்றவர் உற்றவர்
எம்மையும்
தொழில் நுட்பகருவியை
கையாழவும் மெய்யாழவும் செய்தாய்

மாமுகமாய் பரிணமித்தாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய்
ஆளிவ்லா விமானமாக
ஆடலும் பாடலும்
போடுகின்றாய்
இணைய வலைத்தளமாய் இயங்குகின்றாய்

நீ வாழி
உன் புகழ்வாழி
உன்னை மிஞ்ச யாரும்
இல்லை
உனக்கு இணை ஏதும் இல்லை

நதிபோல் ஓடுகின்றாய்
நாணல் புல்போல் தயக்கமும் காட்டாய்
துணைவி தூணாக
நின்று உயர்ந்தவன்.நீ
தத்துவ ஞானி
நித்தியசீலி
சிரித்தபடி அணைப்பவளும் நீ

நீ நீடுடி வாழ்க
நித்தமும் நின்புகழ் ஓங்க
நீ வாழி நின்புகழ்வாழி

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading