புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
பால தேவகஜன்
மீண்டெழு!
உரத்த வீரம்!
மொளனித்து கிடக்க
கனத்த துயரில்
கரையும் ஈழம்!
காத்திட நீங்கள்
மீண்டே எழுக!
இனத்தின் விடியல்
உங்களின் கையில்
இருந்திட்ட காலம்
மீண்டெழ! வேண்டும்
ஈழத் தாயும்
இன்னல்கள் மறந்து
மிளிர்ந்திட வேண்டும்.
அச்சமில்லா நிலைகண்டு
ஆக்கிரமிப்பு உச்சமாய்
அங்காங்கே அரங்கேற
மிச்சமாய் இருந்த நிம்மதியும்
நிலைகுலைந்தே போகுதின்று
துச்சமாய் எங்களை
தூக்கி எறிகின்றான்.
எச்சமாய் எங்களை
எழனப்படுத்திகின்றான்.
நாம் மீண்டெழ முடியாத
நிலைகளை
கைங்கரியமாய் கையாழ்கின்றான்
பேரினவாத பிசாசுகள்.
புத்தனின் போதனைகள்
பொய்ப்பித்தே போனதின்று.
காவியுடை தரித்த
பிக்குகளின் போக்குகூட
ப்ரமிப்பை ஊண்டுதின்று.
விரும்பிய இடமெல்லாம்
விகாரைகள் எழுப்பி
வேண்டுமென்றே நாட்டை குழப்பி
வேடிக்கே காண்கின்ற பிக்குகளே!
எம்மவர்கள் மீண்டெழுந்தால்
மீளாது உங்கள் மிதப்பு!
விடுதலை வேண்டி வாழும்
எம் இனம்! மீண்டெழ வேண்டும்
விரும்பியபடி எம் தாய்மண்ணில்
நாம் வாழ்ந்திட வேண்டும்.
எம்மவர் செய்த
தியாகத்தின் பலன்களும்
அறப்போரின் வல்லமையும்
என்றோ ஒருநாள்
ஈழத்தை மீண்டெழ வைக்கும்
அன்றே எமக்கான
பெருவாழ்வும் கிட்டும்.
