அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

புதிர்

கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்

சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்
சொல்லவிடாது விடையை
குழப்பியே சாதிக்கும்

முடிச்சுக்களாய் நின்று
மனதினைத் தட்டும்
வரிக்குள்ளே ஆயிரம்
அர்த்தங்களும் சொட்டும்

தெரிந்தது போலிருக்கும்
தெரியாதது அதுவாகும்
புரிந்தது போலிருக்கும்
புரியாததாய் புதிராகும்

விடை சரியென்றாலே
புன்னகையும் மலர்கின்றது
அதைப் பெருமையுடன்
சொல்லியே மகிழ்கின்றது

ஜெயம்
14-01-2026

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading