புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
பூக்களின் புதுவசந்தம்
கவி 719
பூக்களின் புதுவசந்தம்
இலைகளை உதிர்த்து களையிழந்து கிடந்த செடிகளில்
முளைவிட்டு துளிர்த்த கிளைகளில் வர்ண அலங்காரங்கள் தொங்கின
பூக்கள் பூக்கும் தருணமிது ஏனெனில் இது புது வசந்தகாலம்
பார்க்கும் இடங்களிலெல்லாம் புஸ்பங்கள் புன்னகைத்தே தேனீக்களை விருந்துக்கழைத்தன
சித்திரை மாதம் இத்தரையெங்கும் முத்திரை பதிக்கும் புதுவசந்தம்
உருக்குலைந்து கிடந்த சோலைகளெல்லாம் புதுப்பொலிவுடனான சுகந்தம்
மரங்களுக்கு ஏன் இந்த அவசரமோ
இலை வருமுன்பே பூக்கின்றன
வரம்வாங்கி வசந்தத்தை தென்றலும் வாசத்தை வசப்படுத்தி சுவாசத்தை குசிப்படுத்துகின்றது
நிர்வாண மரங்களெல்லாம் ஆடையுடுத்தி தன்னை அலங்கரிக்க வந்ததன்றோ நேரம்
கர்வத்தை மரங்களுக்கு வரவைத்திடவே காம்புகளில் தொங்குகின்றதே அழகுக் குவியல்கள்
எழிலிலைப் பூசியே இயற்கையும் விழிகளுடன் கதைபேசி காதலிக்கும்
வழியெல்லாம் பூக்களின் மாநாடு இனிய வசந்தத்தின் வரவோடு
ஜெயம்
11-04-2024
