போனும் போராட்டமும்

கெங்கா ஸ்ரான்லி

அம்மா சமையலில் கையுடன் போனில்
மகள் குளியலறையில் கையில் போடுடன்
அப்பா ஒருகையில் தேனீரகோப்பை
மறுகையில் போன
மகனோ படுக்கையில் எழும்பாமல்
கையில் போன்
இதை என்னவென்று சொல்ல
உணவின்றி சீவிக்கலாம்
போனின்றி சீவிக்க முடியாது
இந்தப் போனாலே எத்தனை எத்தனை
போராட்டங்கள்
சற்பண்ணப் பொனால்
சட்டையை கழட்டென்பான்
கழட்டியதும் கற்பழித்து விடுவான் போனிலே
அதை வைத்தே பின்
பிளைக்மெயில் பண்ணி காசு பறிப்பான்
எவ்வளவு போராட்டம் இதனால்
செல்பி எடுப்பார் சிந்தனையற்று
சிலம்பாட்டம் தானுமிங்கே
இளையோர் கையில் போன்
இதனால் தான் எத்தனை போராட்டம்
வீட்டில் சுமூகமில்லை
கையில் போனுடன் வீட்டுக்குள்ளேயே
உரையாடல்
அம்மா பிள்ளைகளை சாப்பிடக் கூப்பிடுவதும்
போனில் தான்
இது தானே நடக்கிறது இப்போ
விரிசல்கள வருகிறதும்
போனாலே
நிம்மதி கெட்டதும் போனாலே
போனால் போராட்டம் உண்மை
போட்டுவிட்டு வேலையைப் பாருங்கள்
போனை அளவோடு தேவைக்கு
பயன் படுத்துங்கள்
போராட்டம் குறையும்!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading