28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
21/03/2023 செவ்வாய்
“விடியல்”
————
இரவு ஒன்று கழியும்!
இனிய காலை விடியும்!
உளவு பார்த்த நிலவும்,
உரிய ஓய்வு காணும்!
அலகு நீண்ட குருவி,
அமரும் மலரை மருவி!
விலகி நழுவும் தேனி,
விரையும் மஞ்சள் பூசி!
கண்ணை உரசிக் கமலம்
கைகள் நீட்டி அமரும்!
அண்ணல் வருகை புரியும்!
அவனி எல்லாம் மகிழும்!
விடியல் வந்து போகும்!
விளக்கும் எரிந்து தீரும்!
குடிகள் செய்த பாவம்,
குறைவே இன்றி நீளும்!
என்று எமக்கு விடியலென,
ஏங்கும் இதயம் துவளும்!
இன்று அல்ல நாளையென,
இழுத்தே காலம் தவழும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...