மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
28/03/2023 செவ்வாய்
“நீர்க்குமிழி”
—————
பட்டி நிறை வெள்ளத்திலே
பாவை யென்று வந்தவளே!
எட்டி நின்று பார்க்கையிலே
என் உள்ளம் கவர்ந்தவளே!

குட்டிக் குட்டி குமிழெனவே
குடைபிடித்து வருபளே!
ஒட்டி ஓடும் வெள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒளிர்பவளே!

கண்ணாடி உடல் வாகில்
கட்டழகு கொண்டவளே!
பின்னாடி விரல் பட்டால்
பிடித்தவுயிர் மாய்ப்பவளே!

கைபட்டால் உயிர் மாய்க்கும்
கற்புக்கரசி ஆனவளே!
மெய்பட்டால் துவண்டு விழும்
மேலான குணத்தவளே!

வேறு
———
நீர்க் குமிழே வாழ்வென
நீத்தார் சொல்லிச் செல்ல!
ஊர்க்கிது உபதேச மென
ஊர்க்குருவி ஒன்று சொல்ல!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading