தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 218
18/04/2023 செவ்வாய்
“சுடர்”
———
சுதந்திரச் சுடரைக் கையேந்தி
சுழன் றடித்தாறே நம்காந்தி
இதந்தரு வாழ்வு தனைவேண்டி
இணைந்தது கூட்டம் இடிதாங்கி!

அப்துல் கலாமெனும் அறிவுச்சுடர்,
அழைத்தது மாற்றக் காலவிடர்!
சிற்றூர் பேரூர் பேதமின்றி,
சிலிர்த்தன மரங்கள் வேரூன்றி!

விளக்கு ஏந்திய சீமாட்டி,
விளைத்தாள் நலமே சுடரேந்தி!
கிழக்கு மேற்கென்ற வரையின்றி
கிடைத்தார் திரேசா சுடராகி!

ஒலிம்பிக் கிண்ணச் சுடரொன்று,
உலகில் எரியும் தினமுண்டு!
வலிக்கும் பொழுதைத் தாம்மறந்து
வாழ்வர் மக்கள் களிப்புற்று!

ஈகைச் சுடரைப் பயமின்றி,
ஏந்தி வணங்கும் நிலைதோன்றி,
வாகை சூடித் தமிழினமும்,
வாழும் நிலையும் வரவேண்டும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan