தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:219
25/04/2023 செவ்வாய்
ஆற்றல்
———-
ஆற்றல் என்ற முனைப்பது,
அறிவை முதலாய் கொண்டது!
போற்றல் தூற்றல் ஏற்பது!
போக்கும், வரவும் உணர்வது!

பிறப்பில் ஆற்றல் வருவது,
பிரமன் கொடுத்த வரமது!
பொருப்பில் ஒளிரும் ஒளியது,
பூவுக்கு மணமாய் இணைவது!

கறையான், புற்று சமைப்பது,
கருவில் உருவான அமைப்பது!
இறைவன் கொடுத்த திறனது!
இகத்தில் நாமும் சுவைப்பது!

பயிற்சியால் ஆற்றல் பெறுவது,
பலநாள் முயற்சியின் பலனது!
உயர்ச்சி நோக்கிய உழைப்பது,
உயர்த்தும் வாழ்வின் ஏணியது!

கற்க, கேட்க, கதைசொல்ல,
கவிதை இலக்கியம் உருவாக்க,
உற்ற தோழனாய் உனக்காக,
உடனே உதவிடும் உனதாற்றல்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading