மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 209
07/02/2023 செவ்வாய்
நிச்சயதார்த்தம்
———————-
எங்கோ பிறந்த அவனுக்கும்
எங்கள் வீட்டு அவளுக்கும்
மங்களம் சேர்க்கும் திருநாளாம்!
மகிழ்வுறு நிச்சயப் பெருநாளாம்!

அவனும் அவளும் சேர்வதற்கு
அத்தி வாரம் இட்டிடும் நாள்!
இனமும் சனமும் ஒன்று கூடும்
இனிய ஆனந்தம் தரும் நாள்!

பேச்சு “எல்லாம்” சிறப்பானால்
பெரியவர் கூடி நாள் பார்ப்பர்!
கூச்சல்,இரைச்சல் நடுவினிலே
குறித்த நாளையும் அறிவிப்பர்!

தட்டங்கள் இரண்டு, கைமாறும்!
தனயர்கள் மீதும் பொறுப்பேறும்!
திட்டங்கள் பலவும் அரங்கேறும்!
திருமண வேலையும் சுகங்காணும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading