மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:243
28/11/2023 செவ்வாய்
“எச்சம்”
பிரமிட்டின் அடியின் எச்சம்,
பிரமிக்கும் வகையில் உச்சம்!
திசையெட்டும் வியக்கும் எச்சம்,
தீர்க்கமாம் அறிவின் உச்சம்!

பல்நூறு ஆண்டுகள் சொச்சம்,
பாரினில் வாழ்ந்த உயிரெச்சம்,
பலமாகிட்ட திண்ம அவ்வெச்சம்,
பாருக்கு நிலக்கரி தந்தோச்சம்!

அலைகடல் திமிங்கில உமிழும்,
அதனது திகைத்திடும் விலையும்,
தலையது வெடித்திடத் தோன்றும்!
தரணியை மலைத்திட த் தூண்டும்!

தமிழ்நாட்டு “கீழடி” ஆய்வும்,
தாய்மண்- உலோக எச்சமும்,
மேல்நாட்டு ஆய்வினை விஞ்சும்!
மீண்டுமெம் பெருமை சேர்க்கும்!

ஊரிலும் கிண்டல்கள் உச்சம்!
உறைகளில் சேர்க்கிறார் எச்சம்!
போரிலே நடந்தவை வெளிச்சம்!
பிறக்குமா நீதியென்றே அச்சம்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading