மனோகரி ஜெகதீசன்

நிர்மூலம்

சிதைத்தார் எம்மொழியைச்
சிங்களத் திணிப்பால்
வதைத்தார் அழித்தார்
அக்கினிப் பொறியால்
உதைத்தார் தகர்த்தார்
ஊனமாக்கினர் நினைவிடங்களை

தள்ளி அகற்றித்
தமதாக்கினர் நிலங்களை
எள்ளித் தடுத்தனர்
நினைவேந்தல் நிகழ்வுகளை

நிர்மூலத்தின் உச்சமே
நினைவிடங்களின் தகர்ப்பு
நிகழ்த்திய நீசர்
காணவேண்டும் அச்சம்

வடுவல்ல நினைவிடம்
வீரத்தின் சுவடே நினைவிடம்
ஆர்த்தெழும் வீர உணர்வுகளின் உறைவிடம்

வீழ்த்தியவன் கபடத்தையும்
காட்டும் அடையாளம்
வீசியுடைததுவோ அதனால்தான் விலங்குப்பட்டாளம்

அடுத்தவர் வாழ்வில்
அவலத்தைக் கொட்ட
கொடுத்தவர் யாரோ
இவருக்குத் தூண்டல்

உரியன காணாது
உதிராது எம்முயிர்
ஊனத்துடன் வெந்து
உருக்காது எம்முடல்

காலமும் உணர்வும் களமும் கைகோர்க்கக்
கடையாருக்குக் கொடுப்போம் நாமும் பதிலடி
அப்போது காண்பார் இவரும் தீராத் தலையிடி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading