அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பு

உள்ளத்தில் தோன்றும்
உணர்வே விருப்பு
உயர்த்தும் தாழ்த்தும்
அடிக்கடி உதித்து

கனவிலும் நினைவிலும்
உலவும் கால்பதித்து
மனதையும் உருக்கும்
முயலென நெருக்கி

கதைபல வீசும்
களமதில் குதித்து
எதையெனச் சொல்வேன்
இங்கு எடுத்து

புத்தரின் விருப்பினாலே
பூத்தது ஞானம்
பூண்டது அதனால்
பூமியும் புதுக்கோலம்
சித்தரும் கொண்டார்
சிந்தையால் சிவத்தியானம்
சித்திகளைப் பெருக்கிச்
சிந்தியது சிவயோகம்

கர்த்தரின் விருப்பே
கழற்றியது தீதை
காட்சியும் ஆனது
கண்களுக்குச் சிலுவை
மீளவும் நிகழ்ந்தது
அவரின் எழுகை

எத்தரின் ஆசையோ
எறிந்திடும் மாசை
சுத்தமும் போகும்
சுகமும் சாகும்

சீதை, இராமன்
கொண்ட விருப்பால்
மிதிலை கண்டது வில் வெடிப்பு
இராவணன் ஆசையாலேயே
வெடித்தது ராம நெஞ்சு
துடித்தாள் சீதைக்குஞ்சு
தாவினான் அனுமன்
தழுவியது தீ

சீதையின் விருப்பினாலே
திண்டது அவளைத் தீ
பாதையிட்டது இராம நீதி
பழுக்கொடுத்தது பாமரச் சதி

கம்பனின் விருப்பினாலே
கண்டோம் காவியம்

மீனவன் விருப்பாலேயே
மிதந்தோடும் படகு
அகப்படா விருப்பால்
அலைந்தோடும் மீனும்
அகப்படின் அதுவும் அல்லாடிச் சாகும்
அடுத்தவர் ஆசைக்காய்
அடுப்பினிலே வேகும்.

மனோகரி ஜெகதீஸ்வரன்
பதியவில்லை

Nada Mohan
Author: Nada Mohan