கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

குருதிப்புனல்

கந்தகக் குண்டு வீச்சால்
கழன்று போனது எம்மவர் மூச்சு
அந்தரத்தில் பறந்து சிதறிய அங்கங்கள்
சிந்திய குருதிப் புனலால்
சிவந்தது முள்ளி வாய்க்கால்

மரணித்த தாயின் மார்பினைச்
சப்பிய மழலை சுவைத்தது குருதிப்புனலை
மரணத்தில் தப்பியவரும்
அப்பினார் இதுகண்டு அனலை

அற்பருக்கு இதுவெல்லாம் அங்கதம்
அல்லல்பட்ட எம்மையோ எடுக்கவைத்தது சங்கற்பம்

எஞ்சியவர் சொன்ன கதைகள்
தஞ்சத்தில் பெற்ற வதைகள்
அஞ்சி வாழும் வாழ்க்கை
நெஞ்சில் கொட்டும் நெருப்பை

இனவாதம் தானே துப்பியது குருதிப்புனலை
கனவிலும் நினைத்தோமா இதனை

சனநாயகம் செத்தால்
சங்கடமே உச்சம்
சாட்சியெனவே நிற்கின்றோம் நாமும்
கண்ணீரோடு நித்தம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan