மனோகரி ஜெகதீஸ்வரன்

ஈரம்

கண்ணில் தோன்றும் ஈரம்
காட்டும் நெஞ்சின் பாரம்
மண்ணில் சுவறும் ஈரம்
தீட்டும் பசுமைக் கோலம்
விண்ணைத் தழுவும் ஈரம்
வீழும் மழையாய் பாரும்

மனதில் புகும் ஈரம்
மகிழப் பொழியும் அருளை
உனதெனது என்னும் வீம்பு
உருவாகின் உண்டாக்கும் இருளை

உன்னில் என்னில் உண்டு ஈரம்
உருகியுதவி வாழ்வதே அதனது சாரம்

ஈரமில்லா மனிதர் வாழ்வது
பூமிக்குப் பாரம்
இதனை அறிந்து
இயங்கார்
பிறரிதயத்தில் தரியார்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan