முடிவா விடிவா

செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா

அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும் நேரம்
போரும் பதட்டமும்
வந்தாலே சோகம்
சண்டையும் பேச்சும்
கண்துடைப்பு திட்டம்

ஆண்டுகள் கடந்தும்
பேச்சுத் தொடராம்
அழியாத சுவட்டின்
அவலத்தின் தாகம்
அகப்பட்ட உயிரின்
கண்ணீரின் தேடல்
முடிவும் இல்லாமல்
விடிவும் ஓட்டம்

ஆட்சியிலே மாற்றம்
கற்றிடும் பாடம்
அணிவகுத்து பலதும்
ஆளுமையின் ஏற்றம்
தோயுடன் வாழ்வும்
சீரழியும் நிலையும்
பசிதனை போக்கி
பாரினை நிறைத்திடு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan