பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மே 18 மறக்கத்தகுமா..

வசந்தா ஜெகதீசன்

மே 18 மறக்கத்தகுமா?
ஆண்டுகள் பதினைந்து அவலத்தின் அழிப்பு
மனிதத்தின் நேயம் மாண்ட துடிப்பு
மறக்கக்தகுமா மே 18 !
மரணம் விதைத்தோம்
முள்ளிவாய்க்கால் குருதி நிலமாய்
கொலையின் களமாய்
வேண்டாம் எமக்கு
வேதனைச் சுவடு

வெந்தணலிட்டோம், வேதணை சுமந்தோம்
வேரோடு வீழ்ந்தோம், விழுதுகள் இழந்தோம்
முள்ளிவாய்க்கால் மே 18
எண்ணிட எண்ணிட குருதி கொதிக்கும்
ஈனர்கள் செயலில் இதயமே வெடிக்கும்

பாலுக்கு அழுத பாலகர் மரணம்
பரிதாப நிலையில் உறவுகள் ஒலம்
அவலத்தின் பிடியில் அன்னை மண் கோலம்

ஆண்டுகள் பதினைந்து இழப்பின் ரணத்தில்
முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு
மே 18 வலியின் வடுவே

ஈனர்கள் செயலில் ஈழமே இருளில்
ஆண்டுகள் பதினைந்து நெருப்பின் சுவாலை
எந்தன் உறவுகள் எரிந்த வேளை
முள்ளிவாய்க்கால் மே 18 வலியின் வடுவே

குருதி கொதிக்குது நரம்பு புடைக்குது
நம்மின ஓலமே எண்திசை ஒலிக்குது
அன்றைய அவலம் ரணமாய் கணமாய்
முள்ளிவாய்க்கால் மனிதம் புதைத்த மே 18
மறக்கத்தகுமா?

வேரோடு விழுதுகள் வெந்தணலிட்டோமே
வேதனை வெதும்பலில் வெந்துமடிந்தோமே
மே 18 வேண்டாம் எமக்கு.!
ரணமே சுமந்த மனிதம் தளிர்க்க
வழியே ஏது எம் அகமே கூறு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading