புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ரஜனி அன்ரன்
“ மூத்தோர் திங்களில்….முத்துக்கள் இரண்டு “கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.03.2023
என்னிரு கண்களைப் போல்
எனக்கும் அண்ணாக்கள் இருவர்
அக்காவிற்கு அன்புத் தம்பிகள்
எம் மூவருக்கும் முத்தான அண்ணாக்கள்
எமைத் தாங்கிய மூத்த உறவுகள்
எமக்காகவே வாழ்ந்த வாழும் உறவுகள் !
அண்ணன்கள் இருவரும்
வர்த்தகத் துறையினில் கல்வியினைக் கற்று
பெரியண்ணா யாழ் பல்கலைக்கழக நூலகத்தில்
நூலகவியலாளராகப் பணியினை ஆற்ற
நாட்டின் சூழ்நிலை காரணமாக
நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார் சின்னண்ணாவும்
குடும்பமாகி பிள்ளைகளோடு தொடர்கிறது வாழ்வும் !
பிஞ்சு வயதினிலே நாம் தந்தையை இழந்தபோது
தந்தைக்குத் தந்தையாகத் தாங்கி நின்று
தங்கைகளுக்கு தந்தையாகவே வாழ்ந்து
சிந்தையில் நிறைந்து சீரினைத் தந்து
கல்விப் பாதையில் கரையேற்றி வைத்து
வாழ்வின் நிமித்தம் புலத்திற்கும் அழைத்து
வாழ்வினையும் அமைத்துத் தந்த
என் அண்ணாக்களுக்கு நவில்கின்றேன் நன்றி !
மூத்தோரைப் போற்றும் திங்களில்
முத்துக்களாம் என் அண்ணாக்கள்
முத்தாப்பாய் என்றும் சுகநலத்தோடும்
நீடு புகழோடும் நீடூழி வாழ
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன்
களம் தந்த பாமுகத்திற்கு நன்றி நன்றி !
