ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.06.23
கவி இலக்கம்-107
பசுமை

அகலாத ஞாபகங்கள் ஆழமாய்
விரிய எமக்குள் ஆயிரமாயிரம்
பெருமூச்சில் துடிப்பு

பசுமை நினைவுகளின் வாசம்
சோர்ந்தவரை உசுப்பி எழுப்பும்
பூரிப்பு

துள்ளித் திரிந்த காலம்
பள்ளியில் செய்த குறும்பு

இலாச்சியில் பொரி விளாங்காய்
ஒளிச்சு வைத்து உண்ட சுவைப்பு

நாவற்பழம் தின்று வெள்ளைச்
சட்டையை கத்தரிப்பு நீலம்
கறையாக்கிய சிரிப்பு

தென்னை மரப் பொந்தில்
ஒளித்திருந்த கிளிகள்
பச்சை மிளகாய் கொத்தி
உண்ணும் துடிப்பு

அம்மே அம்மே எனக்
கத்தியபடி பிறந்த உடனே
தெத்தித் தெத்திப் பின்னால்
துரத்தும் ஆட்டுக் குட்டி நடிப்பு

கோழிக் குஞ்சுக்கு குங்குமச் சாயம்
பூசிக் கழுகுப் பார்வையில் இருந்து
தப்பிக்க வைத்த சோடிப்பு

பச்சைப் பசேலாய் மனக் கண்ணில்
அசைந்து நடனமாடும் நெல் வயலும்
தென்னஞ் சோலையும்

மறக்கவே முடியாத அன்றைய
பூரிப்பான பசுமை நினைவுகளே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading