வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.02.22
கவி ஆக்கம்-207
உருமாறும் புதிய கோலங்கள்
ஆண்டாண்டு தோறும் புலம்பி அழுது
வேண்டாத வேறு வினை சுமந்து
தீண்டத்தகாத பழக்க வழக்கம் புகுந்து
கண்டு கொண்ட இன்பமது மீண்டும்
தொடரவும்,மறக்கவும் முடியாது பிணைந்து

புதுப்புது ரசனைகள் மயங்கி பூகம்பமாயிட
குதூகலக் குடும்பம் குலைந்து கூண்டில் நின்றிட
பாதுகாவலனோ பாழாய்ப் போன மது,மாது
போதையில் பொத்தென புகுந்தழித்திட

கட்டிய மனைவி கண்ணீருஞ் சோறுடன்
காவல் காத்து பெற்ற பிள்ளை வெறுத்து
மன அழுத்தத்தில் மாறுபட்ட முடிவெடுக்க
கொன்றது கொரோனா என்று வேலையின்றி
நாளும் பொழுதும் வீட்டில் இருந்து தொடரும்
பாதகச் செயலில் உருமாறும் கோலங்கள்
மாறாதா?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading