ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.05.22
ஆக்கம்-57
தொன்று தொட்டுத் தோட்டத் தொழிலாளி
என்றும் போராடும் ஏமாளி
இன்றுந் தொடரும் கூலியாளரில்
உறிஞ்சிய உதிரம் அடிமையாவது
முறையன்றோ

தீராத வலி சுமப்பவன் கூலியில் சீற்றம்
விலைவாசியோ ஏற்றம் வீட்டுக்கு வீடு
வேலையில்லாத் திண்டாட்டம் ஏமாற்றம்
போட்டிபோடும் மானிடம் தடுமாற்றம்
வெறி பிடித்து வேட்டையாடும் முதலாளி
வர்க்கம்

சிதைந்திட தொழிலாளி செவிக்கிரங்கி
உயிர் கொடுத்திடு தொழிலாளர் தினமே
தலை குனிந்தது போதும் இனியாவது
நிமிர்ந்து நின்று புன்னகை பூத்திடு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading