புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.08.22
ஆக்கம்-46
விடுமுறை
புலம் பெயர்வில் விடுமுறை பலமுறை
புகுந்தாலும் விறுவிறுப்பாய் விரைந்தது
கனடியப் பயணம்
உறவினரின் திருமண வைபவம்
குறுஞ் செய்தி அழைப்பிதழ்

ஆம்ஸ்ரடாம் மண்ணிலிருந்து
எட்டு மணி நேரம் பறந்தது
விண்ணிலே விமானம்

அங்கே கல்யாணக் கொண்டாட்டம்
கோலாகலம்
சொந்த பந்தமும் ,அல்லாத உறவுகளும்
சந்தித்ததோ குதூகலம்

அமெரிக்கா கனடா எல்லையிலே
அமைந்திட்ட நயகரா கோபத்தில்
குதித்து உறுமிய சத்தம்
காதிலே விறுவிறுத்தது
குறும்படமாய்

அழகான இடங்கள்,ஆரவார
சுண்ணாகச் சந்தை எல்லாமே
தாயக நினைவு மீட்டது
சந்தோஷ விடுமுறை ஆனதே

Nada Mohan
Author: Nada Mohan