ராணி சம்பந்தர்

10.09.24
ஆக்கம் 158
வலி

வயிற்றுக் குத்து வராதவனுக்கு வேதனை வலி
என்னவென்று
தெரியவே தெரியாது

கரு பத்து மாதம் சுமந்த
தாய்க்கு பெற்றெடுத்த
சிசு பார்த்ததும் பிரசவ
வலி புரியவே புரியாது

தெரு விபத்து நிகழ்ந்து
கை கால் முறிந்து உறுப்பு சிதையும் வரை
மரண வலி அறியவே
அறியாது

விதம் விதமான வலி
பதம் பார்க்கும் பலி
மத வெறி, காதல் பறி,
அரசியல் முறிவு, துரோகக் குறி துரத்த

இன்னுமின்னும் மாந்தர் சுமக்கும்
மனவலி மாறா
வடுக்களாய்
நெரித்திடுமே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading