அறிவின் விருட்சமே..
அறிவின் விருட்சம்
வசந்தா ஜெகதீசன்
காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்…
ஆற்றின் ஆழமாய் அறிபொருளின் விருட்சமாய்
காற்றின் வலிமையிலே காத்திடமாய் கலந்து வந்தாய்
போற்றும் மகிமையிலே போதிக்கும் அறிவிலே
வேற்றகத்து வாழ்விற்கு வீறுகொள் வாஞ்சை தந்தாய்
உரிமை நிறைந்திடவும் உறவாய்ப் பேணிடவும்
மொழியின் சுடராகி முனைந்திடத் தளமானாய்
எண்ணற்ற வழிசமைத்து எதிலும் மகுடமிட்டு
எழுத்திலே முதன்மையிட்டு
எவருக்கும் ஏற்றமிட்டு
சினிமாவைப் புறந்தள்ளி செதுக்கலிட்ட வானொலியே
அறிவிற்கு அடித்தளம் எவருக்கும் முதலிடம்
நேயர்கள் தொகுப்பாக்கம் இளையோர்கள் படைப்பாக்கம்
எதற்கில்லை வழிகாட்டல்
மருத்துவமும், அறிவியல் ஆய்வுகளும் தொகுப்புக்களும் தொடர்மேடை நிகழ்வுகளும்
பயிற்றலில் பயணிக்கும் பாமுகம் போல் பணியாற்றும்
பண்படுத்தல் பயனூக்கம் கவித்திறனில் நீள் தொடர்ச்சி
காற்றலையின் முதலொலியே
திரையிசையின் பாடலின்றி
திருப்பத்தின் திறவுகோலாய்
தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடராகிப் பயணிக்கும் வளர்ச்சியில் பாமுகமே
வனப்புமிகு காற்றலையே
மொழியாகி வாழ்வு தந்தாய்
முதன்மையில் நிறைகின்றாய்
இளையோர்கள் நேயர்கள்
உச்சம் தொடும் உருவாக்கம்
அச்சமற்ற பணிநோக்கம்
அத்திவாரம் தளமிட்டு
அர்ப்பணத்தில் பணியாற்றும்
காற்றலையின் சேவகமே தமிழ்மொழியின் யாசகமே
இதயத்து நன்றிகள் ஈகைக்கு நிகரில்லை
இடரின்றி உயர்வில்லை இலக்கிற்கு ஏது எல்லை.
நன்றி மிக்க நன்றி
