வசந்தா ஜெகதீசன்

விடியல்…
ஆற்றலின் மிடுக்கிலே
அனுதினமும் பயணம்
அயராத உழைப்பிலே
அடித்தளமே மிளிரும்
எண்ணத்தின் வாழ்வே
ஏற்றமாய் ஒளிரும்
வண்ணத்தில் கனவுகள்
வாகையைச் சூடும்
குன்றிலே விளக்காய்
குவலயமே நிமிரும்
வென்றாகும் விடியலே
வீரத்தின் வெற்றி
விழுதுகள் படர்கின்ற
விழுமியமே சக்தி
நன்றாகும் நல்லவை
நாளுமே போற்று
நானிலத்தில் விடியலே
மானிடத்தின் மகுடம்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan