கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நேரத்தின் சிறை…
கம்பிகள் இரண்டு
கட்டுபாட்டிலே வாழ்வு
கணதிகள் சுமந்து
கைதிகள் போல
வசப்பட வைக்கும்
வருமானத்தை கணிக்கும்
விடியல் முதலாய்
நாள் முடிதல் வரையாய்
நம்மிரு விழியில் நர்த்தனம்
புரியும் அசைந்தே ஒடி
அசைந்திட வைக்கும்
அசைவற்ற கூட்டில் அகப்பட்ட
கைதி
அகிலத்தின் திறவுகோல்
அனைத்திற்கும் உபகாரி
வாரத்தின் இறுதியில்
மாற்றம் காணுதே
மறுபடி சுழன்று மணியென
ஆகும்
மலிவே அற்றதாய் மணியும்
நகரும்.
விடியல் தொடரும் விடயங்கள்
நகரும்
அரிதே அரிது அறிவிலும் அரிது
நேரம் என்னும் நேர்மை அம்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan