வஜிதா முஹம்மட்

பார் முகம் வாழீர்

சாதி மதபேதமின்றி சாதனை
படைத்து வந்தாய்
சரிவுகள ஏதுவுமின்றி
சமத்துவம் காத்துநின்றாய்

இலைமறை திறன்களை
இமயமாக்கும் நிரைவரை
இளையவர் முன்நிலை
இயலாமை என்றில்லை
சாலை ஓரமரநிழல் போல்
சமர்த்துவக் குடைநெறியால்
சாக்கடை எண்ணங்கள் ஏதுமில்லை
சாதிக்க வைத்த தலைமுறை
சாதனை எல்லையில்லை

27 ஆண்டுகள் இணைகரமாய்
இருந்தோம் சிறுகசப்பின்றி
இணைக்கொடு தம்பதியாய்
இணையம் தாண்டிய உயர
நிலையாய்
வாழிய வாழிய பார்முகமே
வசந்த வரம் எங்களுக்கே
ஓர்தாய் வயிற்று உறவுகள் போல்
ஒற்றுமை தானே பார்முகப் பலமே.

நன்றி
ஓட்டமாவடி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading