“விடுமுறை”—/எல்லாளன்—

எம் உறவாய் புலம்பெயர்ந்து எம் பின்பாய் வந்தோர்
ஏற்றத்தை தம் உழைப்பால்
எழிலாக கொண்டோர்
தம்முடனே எங்களையும்
தமிழ் நாட்டு வந்து
தரிசிக்க அழைத்தார்கள்
விடுமுறையில் நின்று
சென்ற ஒரு மாதமும் நல்
பேரின்ப பொழுது
சென்று வர எங்கனும் நீள்
வாகனமும் ஒழுங்கு
எண்திசையும் மாநிலங்கள்
மூன்றினை நாம் சுற்றி
எழில் தலங்கள்,பல இடங்கள்
எழிலை கண்ணில் ஒற்றி.

கருங்கல்லால் பெரும் பரப்பில்
கட்டிய பல கோயில்
கலை வண்ண கோபுரங்கள் நாற்திசையும் வாயில்
பெரு மன்னர் சேர சோழ பாண்டியர் கை வண்ணம்
பேரெழிலாய் இரண்டாயிரம்
ஆண்டு தொன்மை இன்னும்
வர வைக்கும் பேரழகு கடற்கரைகள்
அருவி
வண்ண வண்ண பூங்காங்கள்
பறவை,மிருகம் பிறவும்
இருக்கும் சர ணாலயங்கள்
எல்லாமே வியர்ப்பு
இவை பலவும் தமிழகத்தின்
அரசு செய்த படைப்பு

மேலை நாட்டை தோற்கடிக்கும்
கடை தொகுதி ,அரங்கம்
விலாசமான உலக புகழ்
வியாபாரங்கள் அடங்கும்
சாலை நேர்த்தி கட்டிடங்கள்
வானை தொடும் உயரம்
சகலதுமே மேலை நாட்டு
பாணி சென்னை எங்கும்.
வேலை செய்யும் திறனில் வயது வேறுபாடு இல்லை
விதம் விதமாய் தொழில் ஆலை
வேலை பஞ்சம் இல்லை
மால் ஒன்று விஜேய் என்று
ஒன்பது திரை அரங்க
மாடி கொண்ட வசதியான
ஒரே அடுக்கு கொண்டு.

எங்களது தமிழர் வாழும் தமிழ் நாடு சென்று
எம் தமிழின் பெருமை தொன்மை
கண்டு வாரும் நின்று

Nada Mohan
Author: Nada Mohan