விழித்தெழு

18.04.24
ஆக்கம் 312
விழித்தெழு

எழும்போது நீ விழுகிறாய்
விழும்போது நீயே எழுகிறாய்
முழுசும் நினைவு
கனவுகள் அறைகிறது
கழுகு மரத்தில்

விழுபவனைத் தூக்கி
நிறுத்தக் கை கொடுக்க
மறுப்பவனோ விழுந்து
விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல

சுத்தமிலாக் கண்கள்
அசுத்த மனம் சிந்திக்குமா
சிந்தனை மூழ்கிட
வந்தது சமாளிக்கக்
காட்டும் வேடிக்கை
வினோதம் அற்புதம்

வயிறு முட்ட ஆண்டவர்
செரிக்கக் காட்டும் குழப்பம் போக்க
விழித்தெழு மனிதா
அறிவொளி ஊட்ட
புத்துயிரோடு புதுப்
பொலிவோடு விழித்தெழு.
ராணி சம்பந்தர்
ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan