புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

வேலாயுதர் இராசலிங்கம்

நினைவுநாள்;;

நினைவுநாள் நிகழ்வுக் குண்டு
நிலவுநாள் குளுமைக் குண்டு
கனவுநாள் மகிமைக் குண்டு
கனதிநாள் கருத்துக் குண்டு
மனதுநாள் மதிப்புக் குண்டு
மகிழ்ச்சிநாள் இருப்புக் குண்டு
உனதுநாள் வியப்புக் குண்டு
உன்னத படைப்புக் குண்டு !

வத்திரம் உடுக்கும் நாளே
மாவலம் அடுக்கும் நாளே
ஒத்தடம் எடுக்கும் நாளே
உள்ளமும் களிக்கும் நாளே
அத்திரம் பறக்கும் நாளே
அம்புகள் பிறக்கும் நாளே
முத்தமிழ் செழிக்கும் நாளே
முன்வயம் ஒளிரும் நாளே !

கனலியே எதிர்கொண் டாற்போல்
காற்சிலம் பதிர்தல் போலாம்
அனலிடைத் தோய்ந்த மாது
அறமெனக் குரைத்தல் மேலாம்
சினமென வைகுஞ் செவ்வேள்
செந்தமிழ்க் கரங்கள் கோலாம்
புனலிடை மழையென் றாகிப்
பேசிடும் அறங்க ளாகும் !

எத்தனை யுகம்போ னாலும்
எத்தனை வதம்போ னாலும்
சித்திரம் அனைய செந்தேன்
சீருடை அணிந்த அன்னை
பத்திரம் புனையு மட்டும்
பரிட்சய மாகும் சட்டம்
வித்தென அமையு மட்டும்
விழியென இருப்பாள் அம்மா !

வேலாயுதர் இராசலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan