தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
எனது மனது
-
By
- 0 comments
ஷர்ளா தரன்
சலவை
வெண்மை பெற சலவை
தூய்மை தந்திட சலவை
வெள்ளை வேட்டி கட்டியோரும்
வேத வாக்கு குடுப்போரும்
சங்கங்கள் பல அமைப்போரும்
அதற்கு சங்கீதம் பாடுவோரும்
பங்கம் விளைவிப்போரும்
பங்கு பிரிப்போரும்
பக்கம் பக்கமாய் சாய்வோரும்
பக்குவம் அடைந்திட
வெண்மை அது கண்டிராரோ
மனச் சலவை அது கொண்டு
கந்தை ஆனாலும்
கசக்கி கட்டு
முன்னோர் வாக்கு
முழுமையான வாக்கு இது
சொக்கா போடுவோரும்
சொகுசு சேலை கட்டுவோரும்
வாசம் பெற வாசனை திரவியமும்
தேகம் மினுங்க
தேவையற்ற செலவுகளும்
பாசம் இன்றி
பணத்திற்கு பின்னால் ஓடுவோரும்
வேசம் கலைத்திடாரோ
வேதனை தனை போக்கிடாரோ
வெண்மை அது கண்டிராரோ
ஆளுக்கொரு கட்சி
அவருக்கு நாலு அறிவாளிகள்
ஆரவாரமாய் கட்சி வேலைகள்
ஆங்காங்கே காசு புரட்டல்கள்
ஆட்சி அமைப்பதற்குள்
ஆழுக்கு நாலு வீடு வளவுகள்
காலுக்குள் நசுங்கும் மக்கள்
பல காயங்கள் கொண்டு எழுந்திடுவர்
மீண்டும் கை கூப்பி நின்றிடுவர்
கை தூக்கி கோசம் போட்டிடுவர்
மக்கள் மனம் கொள்ளாதோ சலவை
மன்றம் அது கண்டிராதோ
நல்லதொரு தலமை
ஷர்ளா தரன்
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments