அகிம்சையே அடையாளம்..

வசந்தா ஜெகதீசன்
அன்னை தேசத்து அண்ணல் காந்தி
அகிம்சைப்போரின் ஆயுத எழுத்தே
உண்ணா நோன்பின் உலகப்படிமம்
பிரகாச ஒளியின் பிம்பச் சுடரே
எண்ணற்ற கனவில் எண்ணிய தியாகம்
மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம்
கண்ணின் திரையில் கடலெனப் பொங்கும்
மண்ணின் மைந்தா அகிம்சை வேந்தா
ஈரறு தினத்தின் ஈகைச்சுடரே
ஈழவேரின் வேட்கை மைந்தா
ஆகுதியானாய் அன்னை மண்ணில்
அகிம்சைப் போரில் உரிமை பூண்டாய்

வரைந்தகோலத்தின் வைகறை ஒளியே
ஈழமண்ணின் விடியல் வேட்கை
இலக்கில் வெல்லுமே!
நன்றி மிக்க நன்றி

Author: