அந்திப்பொழுது

அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு முந்தியும்
சாப்பாடு உண்டதொரு காலம்

உறவுகள் நண்பர் கூடியும்
உருட்டி விளையாடிய தாயமும்
வெருட்டி பேசிய பேச்சும்
வெட்கம் நினைத்தால் வரும்

அந்திசாயம் வந்த மழையும்
அடங்கிடாது பொழிந்து தள்ளும்
மந்திபோல் குந்திய நினைவும்
மண்ணின் நினைவு வாட்டும்

Author: