அன்னை

ராணி சம்பந்தர்

அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின் துதிப்பிடம்

உரு தந்த கருவின் சுமப்பிடம்
உருவம் சிறு சிறு பருவமாகிட
இரவும் பகலும் உறங்கா விழி
காத்திருந்து மழை குளிரோடு
போர்த்திருந்த நிறைகுடமது

நீதி நேர்மையினது சுரப்பிடம்
பதி, பக்திக்குப் பூரிப்பிடமது
விதியோடு போராடி நோய்
நொடி ஒன்றுமே நெருங்காது

உயிருக்கு உயிராய் பயிரை
வளர்த்தது போல அன்றாடம்
ஊட்டி ஊட்டித் தாலாட்டிய
பெருமை,வணக்கத்திற்கும்
போற்றுதலுக்கும் உரியவள்
ஆனவளே அன்னை .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading