அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
அபிராமி கவிதாசன்
_சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-246_
தலைப்பு!
*”நிலாவில் உலா”*
சித்திரமாய் சிலை வடித்து,
சிங்கார நடை பழக்கி, முத்திரையாய் உனைப் பதித்தேன் முத்து மணி ரத்தினமே!
எத்தனையோ பொம்மைகளை எடுத்துமே நான் கொடுத்தேன்!
பத்திரமாய் வைத்து விட்டு
பார்த்துத்தான் ரசிப்பாயே!
வானத்திலே வட்டநிலா
வந்த செய்தி சொல்வாயே,
கானல் இருள் கலைத்து
கண் சிமிட்டி நகைத்ததையும்,
சின்னச் சின்ன
கதைகளையும், சிந்தையில் பதியச் செய்தேனே!!
சின்ன மகள் ராணியிவள் சிறு வட்டப் பௌர்ணமியில், பாட்டி வடை சுட்ட கதை கேட்க,
நிலவைக்காட்டி, பாற் சோறு ஊட்டி பழக்கியதை நான் மறவேன்!
மின்விளக்கு விட்டிலாய் நீ
என்னைச் சுற்றி திரிவாயே,
மின்சாரம் இல்லா பௌர்ணமியில்!
உலாவலம் மறந்தாயோ!
மண்ணில் பல சாதனைகள் படைத்ததுமே
போதுமென்று, மக்களை
விண்ணிற்கு வாருமென
அழைத்ததுவோ!
நிலவில் ஓர் பயணம்
தரிசனம் பெறுவோமே
நிரந்தர வாழ்விற்கு நிலா இடம் கொஞ்சம் ஈன்றிடுமோ!
-அபிராமி கவிதாசன்
18.12.23
