இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும்
சந்திப்பு வாரம்-247
சிரிப்பு
….
வான்முகில்கள் மோதலிலே
வெடிச்சிரிப்பு – இரு
வல்லரசுகள் மோதலிலே -ஏவு
கணைச் சிரிப்பு!
தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!
கருங்குயில்கள்வாய் திறந்தால்
இசைச்சிரிப்பு-மொட்டு
மலர்விரிப்பில் தோன்றுவதோ
பூஞ்சிரிப்பு!
மழலையர் புன்னகையில்
மலர்வதோ-அந்த
மாயவனாம் எம்கடவுள்
கண்ணனின் சிரிப்பு!
என்மகன் கவிதனின்
குரலோசையிலோ – திரு
வள்ளுவரின் வாய்மொழியாம் தமிழமுதக்குறள் சிரிப்பு!
சந்தேகப்பேர்வழிகள்
உதட்டினிலே எப்பொழுதும்-தோன்றும்காண்
அகந்தையெனும் ஆணவச் சிரிப்பு!
தேசியத் தலைவரை
நேசிப்பவர் முகத்தினிலே – மலரும்
அன்பின் உருவான
தாயின் சிரிப்பு!
எங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில்
விடியும் பார்-ஈழ
தேசத்தின் விடுதலைச் சிரிப்பு!
தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!
அபிராமி கவிதாசன்
02.01.2024

Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments