பாசப்பகிர்வினிலே……58
பாசப்பகிர்விலே!
அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!
அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!
சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாள்பட்ட கொழுப்புமில்லை.
கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பளுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்
கைத்தடி இல்லாமல்
கால் எளுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்.
கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.
அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்
பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொளுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.
இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்
பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும்
விலைகொடுத்து உண்பதற்க்கு.
-பசுவூர்க்கோபி-
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.
நெதர்லாந்து.
