அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

அமைதியின் தூதுவன்

ரஜனி அன்ரன்

“ அமைதியின் தூதுவன் “….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 24.10.2024

இருளில் ஒளிவீசும் கலங்கரைவிளக்கு
உலக நாடுகளை ஒன்றிணைக்கும் தூதுவன்
உலகை வழி நடாத்தும் அமைதியின் நாயகன்
ஐக்கியத்தைப் பேணிடும் ஐக்கியன்
மனித குலத்தின் அறங்காவலனுக்கு
மகத்தான நாளாம் இன்று
ஐப்பசித் திங்கள் இருபத்தி நான்கு
ஐக்கிய நாடுகள் சபை தினமாம் !

உலகில் ஐக்கியத்தைப் பேண
அமைதியை அமுலாக்க
சமாதானத்தைச் சமரசமாக்க
பாதுகாப்பைப் பலப்படுத்த
பசி பட்டினியைப் போக்க
பேரிடர்களைப் போக்கி
மானிடரைக் காக்க
மகத்துவமாய் மலர்ந்ததே
ஐ.நா. சபையாம் அமைதியின் தூதுவன் !

வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்பு
அமைதியின் தூதுவனையும்
ஆட்டம் காண வைக்குது
ஆங்காங்கே போர்களும் தான் வெடிக்குது
அமைதியெங்கும் நிலவட்டும்
ஐ.நா.வின் கொடி எங்கும் பறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading